தொடர்புக்கு: 8754422764

சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி

சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் வசந்தகுமார் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பதிவு: மே 23, 2019 23:17

அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 23:13

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை அதிமுக வேட்பாளரை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பதிவு: மே 23, 2019 22:37

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 22:18

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றார்

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 23, 2019 22:15

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பதிவு: மே 23, 2019 21:52

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தும்கூர் தொகுதியில் தோல்வி

கர்நாடக மாநிலம், தும்கூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா தோல்வி அடைந்தார்.

பதிவு: மே 23, 2019 21:02

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்

கோவை பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 5,67,741 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பதிவு: மே 23, 2019 20:55

மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமோக வெற்றி

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

பதிவு: மே 23, 2019 20:35

ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்தார்.

பதிவு: மே 23, 2019 20:18

மோடி, அமித் ஷா வருகை - டெல்லி பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் எழுச்சி முழக்கம்

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இன்றிரவு டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது தொண்டர்கள் முழக்கமிட்டு எழுச்சியுடன் வரவேற்றனர்.

பதிவு: மே 23, 2019 20:12

நாமக்கலில் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் வெற்றி பெற்றார்

நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிமுக வேட்பாளர் பி காளியப்பனை தோற்கடித்தார்.

அப்டேட்: மே 23, 2019 21:40
பதிவு: மே 23, 2019 20:06

ஈரோட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கணேச மூர்த்தி அபார வெற்றி

ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக-வின் கணேஷமூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பதிவு: மே 23, 2019 19:49

தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 575295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 575295 வாக்குகள் பெற்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளர் என்.ஆர். நடராஜனை தோற்கடித்தார்.

பதிவு: மே 23, 2019 19:26

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 19:20

ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 23, 2019 18:36

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழக வாக்காளர்கள்

பாராளுமன்ற தேர்தலில் இதர மாநிலங்களுக்கு மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பதிவு: மே 23, 2019 18:11

சிவகங்கையில் எச்.ராஜாவை முந்தி வெற்றியை நெருங்கிய கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் எச்.ராஜாவை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வெற்றியை நெருங்கினார்.

பதிவு: மே 23, 2019 17:54

அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் இரண்டரை லட்சம் வாக்குகள் முன்னிலை

அரக்கோணத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் இரண்டரை லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

பதிவு: மே 23, 2019 17:52

சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலை

சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் அதிமுக வேட்பாளரை விட 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 17:48

ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரனை முந்திய நவாஸ் கனி

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 17:44