செய்திகள்

தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர் - திருப்பூரில் அதிகம்

Published On 2019-05-24 09:20 GMT   |   Update On 2019-05-24 09:20 GMT
தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6  ஆயிரத்து 636  வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.



மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மொத்தமாக 72 லட்சத்து 50 ஆயிரத்து 210 (17.1 சதவீதம்) வாக்குகளை  பெற்றுள்ளன. 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) நோட்டா சின்னத்தில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
Tags:    

Similar News