செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் - தலைவர்கள் சூறாவளி பிரசாரம்

Published On 2019-05-04 09:23 GMT   |   Update On 2019-05-04 09:23 GMT
4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். #TNAssemblyByElection
சென்னை:

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய வேட்பாளர்களிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி, தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன், அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ரேவதி போட்டியிடுகிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பி.செந்தில் நாதன், தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. வேட்பாளராக சாகுல் அமீது, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக செல்வம் போட்டியிடுகிறார்கள்.

சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பி. கந்தசாமி, தி.மு.க. வேட்பாளராக பொங்களூர் பழனிசாமி, அ.ம.மு.க. வேட்பாளராக சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ஜி.மயில் சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக எம்.வி.விஜயராகவன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக பெ.மோகன், தி.மு.க. வேட்பாளராக சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளராக சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அகல்யா போட்டியிடுகிறார்கள்.

4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்துள்ளார். மீண்டும் அவர் நாளை முதல் பிரசாரம் செய்கிறார்.

அரவக்குறிச்சி தொகுதியில் நாளை (5-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு தளவாபாளையம், 5.45 மணிக்கு வேலாயுதம் பாளையம், 6.30 மணிக்கு புன்னம் சத்திரம், இரவு 7.15 மணிக்கு க.பரமத்தி, 8 மணிக்கு தென்னிலை, 8.45 மணிக்கு சின்னதாராபுரம், 9.15 மணிக்கு நஞ்சை காளகுறிச்சி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

6-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி வீரகனூர், 5.45 மணிக்கு ஐராவதநல்லூர், 6.30 மணிக்கு சிந்தாமணி, இரவு 7.30 மணிக்கு வளையங்குளம், 8 மணிக்கு பெருங்குடி, 8.45 மணிக்கு அவனியாபுரம் பஸ்நிலையம், 9.20 மணிக்கு எம்.எம்.எஸ். காலனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

7-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம், 5.40 மணிக்கு புதியம்புத்தூர், 6.20 மணிக்கு தருவைக்குளம், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை ஊரணி, 8 மணிக்கு முத்தம்மாள் காலனி, 8.45 மணிக்கு முத்தையாபுரம், 9.20 மணிக்கு புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

11-ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி நாகமலை புதுக்கோட்டை, 5.30 மணிக்கு வடபழஞ்சி, 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி. பட்டி, 8 மணிக்கு நிலையூர் கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

12-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி வசவப்புரம், 5.45 மணிக்கு வல்லநாடு, 6.30 மணிக்கு தெய்வ செயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவாலப்பேரி, 8 மணிக்கு ஒட்டநத்தம், 8.45 மணிக்கு ஒசநூத்து, 9.15 மணிக்கு குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

13-ந்தேதி மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் சீத்தாப்பட்டி காலனி, 5.45 மணிக்கு அரவக்குறிச்சி, 6.30 மணிக்கு பள்ளப்பட்டி, இரவு 7.15 மணிக்கு கினங்கனூர், 8 மணிக்கு குரும்பப்பட்டி, 8.45 மணிக்கு ஆண்டில்பட்டி கோட்டை, 9.15 மணிக்கு ஈசரத்தப் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

14-ந்தேதி மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதி சின்னியம் பாளையம், 5.45 மணிக்கு முத்துக்கவுண்டம்புதூர், 6.45 மணிக்கு லாகராயம்பாளைம், இரவு 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோடு, 8 மணிக்கு கருமத்தம்பட்டி, 8.30 மணிக்கு சாமளாபுரம், 9.20 மணிக்கு சூலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (5-ந் தேதி) முதல் 14-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.

நாளை (5-ந்தேதி) ஓட்டப்பிடாரம் தொகுதி, 8-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதி, 9-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதி, 11-ந்தேதி சூலூர் தொகுதி, 12-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதி, 13 மற்றும் 14-ந்தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 5 மணிக்கு தென்னம்பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும் 6 மணிக்கு கருமத்தம் பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரசாரம் செய்கிறார்.

6-ந்தேதி சூலூர் தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார்.

7-ந்தேதி மற்றும் 8-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து அதன் பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு அவர் அரவக்குறிச்சி தொகுதி தும்பிலாடியில் பிரசாரத்தை தொடங்குகிறார். 4.30 மணிக்கு ஆரியூர், 5 மணிக்கு எல்லமேடு, 5.15 மணிக்கு புஞ்சை காளிக்குறிச்சி, 6 மணிக்கு ராஜபுரம், 6.15 மணிக்கு சின்ன தாராபுரம், 6.45 மணிக்கு ஒத்தமாந்துறை, இரவு 7 மணிக்கு பெரிய திருமங்களம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதுக்கோட்டை, 5.30 மணிக்கு காலங்கரை, 6.15 மணிக்கு ஓட்டப்பிடாரம், 7 மணிக்கு புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.

10-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 12-ந்தேதி சூலூர் தொகுதியிலும், 15-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 16 மற்றும் 17-ந்தேதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.

7-ந்தேதி சூலூர் தொகுதியிலும்,10-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 12-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 13-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார். வருகிற 6-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 9-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 13-ந்தேதி சூலூர் தொகுதியிலும், 14-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 15-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகிலும், இரவு 8 மணிக்கு அவனியாபுரம் பஸ் நிலையம் அருகிலும் பிரசாரம் செய்கிறார்.

நாளை (5-ந்தேதி) மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் தருவைக்குளம் மாதா கோவில் அருகிலும், இரவு 8 மணிக்கு தாளமுத்துநகர் பஸ் நிலையம் அருகிலும் பிரசாரம் செய்கிறார். #TNAssemblyByElection
Tags:    

Similar News