செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் உத்தரவிட்டாரா? - ஸ்டாலின் மீது தேர்தல் கமிஷனில் பாஜக புகார்

Published On 2019-05-03 14:17 GMT   |   Update On 2019-05-03 14:17 GMT
பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக மு.க. ஸ்டாலின் பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷனில் பாஜக புகார் அளித்துள்ளது. #BJPyuvaMorcha #BJPcomplaint #TNCEO #MKStalin #Thoothukudifiring
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு அம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இச்சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக பிரதமருக்கு எதிராக அவதூறான தகவலை பரப்பியதாகவும், இதற்காக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் பாஜக இளைஞர் அணியான ’யுவ மோர்ச்சா’ தமிழ்நாடு தேர்தல் கமிஷனில் இன்று புகார் அளித்துள்ளது. #BJPyuvaMorcha #BJPcomplaint #TNCEO #MKStalin #Thoothukudifiring 
Tags:    

Similar News