செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் - அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு

Published On 2019-04-24 14:31 GMT   |   Update On 2019-04-24 14:31 GMT
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. #ammk #giftpacksymbol #assemblyseatsbypoll #TNassembly
சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த 18-ம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் நேருக்குநேர் மோதும் அ.தி.மு.க.வும் தி.மு.கவும் முறையே இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் கமிஷன் இன்றிரவு ஒதுக்கீடு செய்துள்ளது. #ammk #giftpacksymbol #assemblyseatsbypoll #TNassembly
Tags:    

Similar News