செய்திகள்

வேலூர் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் மனு

Published On 2019-04-17 05:15 GMT   |   Update On 2019-04-17 05:32 GMT
வேலூர் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
வேலூர்:

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை ஆதரித்து பிரசாரம் செய்தார். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.


எங்கள் வெற்றி வாய்ப்பை தடுக்க பா.ஜ.க, அ.தி.மு.க வருமான வரித்துறையை பயன்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சட்டத்திற்கு புறம்பாக எங்களது வீடு, கல்லூரிகளில் சோதனை நடத்தினர்.

வருமானவரி சோதனை நடந்த 16 நாட்களுக்கு பிறகு தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதனால் தகுந்த விளக்கம் கூட அளிக்க முடியவில்லை.

தேர்தல் ரத்து என்பது சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் வெற்றியை தடுக்க சோதனை நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
Tags:    

Similar News