செய்திகள்

வேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்- காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

Published On 2019-04-10 08:09 GMT   |   Update On 2019-04-10 08:10 GMT
வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #VelloreITRaids #Duraimurugan
சென்னை:

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிா் ஆனந்தால் நிா்வகிக்கப்படும் பள்ளி, கல்லூாி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாாிகள் சோதனை மேற்கொண்டனா். மேலும் துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் உள்ளிட்டோருக்கு சொந்தமான பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாாிகள் தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா்.



இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் தேர்தல் பறக்கும் படையால் ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 989.6 கிலோ தங்கம், 492.3 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதால், மே 27ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #VelloreITRaids #Duraimurugan
Tags:    

Similar News