செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2019-06-07 17:57 GMT   |   Update On 2019-06-07 17:57 GMT
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குளத்தை தூர்வாரி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வெள்ளியணை:

ஜெகதாபி ஊராட்சி அல்லாளிகவுண்டனூரில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இங்குள்ள குளத்தை தூர்வாரி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா கலந்து கொண்டு குளத்தை தூர்வாரி மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதில் மாயனூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பெரியசாமி, தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினர். இதில் அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News