செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்- சென்னை மாநகராட்சியில் 5720 வாக்குச்சாவடிகள்

Published On 2019-06-07 16:42 GMT   |   Update On 2019-06-07 16:42 GMT
உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் 5720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளர்.
சென்னை:

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக வார்டுகள் வரையறை செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் மொத்தம் 5720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இதுதொடர்பான வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளர்களுக்கு 5564 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வரும் 10ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்” என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News