செய்திகள்

பிறை தெரிந்தது- தமிழகம், புதுவையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்

Published On 2019-06-04 15:04 GMT   |   Update On 2019-06-04 15:04 GMT
இன்று பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.
சென்னை:

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதிநாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

அவ்வகையில் நடப்பு ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், நாளை ரம்ஜான் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தொடங்கினர். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று பிறை தெரிந்ததால், நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி முறைப்படி அறிவித்துள்ளார். தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டதாக அவர் கூறினார். இதேபோல் புதுச்சேரியிலும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்தார்.
Tags:    

Similar News