செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 9 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-05-30 15:22 GMT   |   Update On 2019-05-30 15:22 GMT
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தம்மநாயக்கன் பட்டி ஊராட்சி ரைஸ்மில் தெருவில் 7 குடும்பங்கள் உள்ளன. இந்த 7 குடும்பங்களுக்கும் தெரு குழாய் மூலம் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக தெரு குழாயில் குடி தண்ணீர் வரவில்லை. இதனால் அவதிப்பட்டு வந்த அவர்கள் இது குறித்து ஆபரேட்டர் பழனிசாமியிடம் முறையாக தண்ணீர் திறந்து விடுமாறு கூறினர். இருப்பினும், குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. 

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மனைவி ஜீவா, இவர்களது 2 குழந்தைகள் மற்றும் கூலி தொழிலாளி கிருஷ்ணன், அவரது மனைவி கிஷ்ணவேணி, இவர்களது மகன் மற்றும் மூதாட்டி ஆராயி, வசந்தி ஆகியோர் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கேனில் மண்ணெண்ணை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நின்று அவர்கள் திடீரென தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News