செய்திகள்

தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2019-05-22 10:19 GMT   |   Update On 2019-05-22 10:19 GMT
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் திருட்டுத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டாம் கேட் அருகே 2 வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் தஞ்சை தென்பெரம்பூர் கிழக்கு தெரு வசந்த் (வயது 23), தெற்கு தெரு ராஜா (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ .61 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.

Tags:    

Similar News