செய்திகள்

மதுக்கூர் பகுதியில் உள்ள கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2019-05-18 13:20 GMT   |   Update On 2019-05-18 13:20 GMT
மதுக்கூர் பகுதியில் உள்ள கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதுக்கூர்:

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வர்த்தக நிறுவனங்களில் இருந்து 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களிடம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

வணிக நிறுவனங்கள் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கண்டிப்பாக வழங்க கூடாது. விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது துணிப்பைகள் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
Tags:    

Similar News