செய்திகள்

குமரி மாவட்டத்தில் கமல்ஹாசன் மீது மேலும் 2 போலீஸ் நிலையங்களில் புகார்

Published On 2019-05-18 06:16 GMT   |   Update On 2019-05-18 06:16 GMT
குமரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது மேலும் 2 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசினார்.

இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசனுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகிறது. போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் இரணியல், வடசேரி போலீஸ் நிலையங்களில் கமல்ஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 2 போலீஸ் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

தக்கலை போலீஸ் நிலையத்தில் அகில பாரத இந்து மகாசபையின் இளைஞரணி செயலாளர் துரைராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை ஒருமையாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து வருகிறார். ஜனநாயக நாடு என்றால் எல்ல சமூகத்தினரையும் ஒன்றாக பாவிக்க வேண்டும். ஆனால் கமல்ஹாசன் இந்துக்களை மட்டும் தாக்கி பேசி இருப்பது இந்துக்கள் மனதை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

இதேபோல் குலசேகரம் போலீஸ் நிலையத்திலும் கமல்ஹாசன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுவரை குமரி மாவட்டத்தில் 4 போலீஸ் நிலையங்களில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி புகார் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News