செய்திகள்

அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது - ஸ்டாலின்

Published On 2019-05-11 13:43 GMT   |   Update On 2019-05-11 13:43 GMT
தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை காலி செய்ய அரசு இன்று உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லக்கண்ணு ஐயா, 12 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News