செய்திகள்

புதுவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற கார் டிரைவர் கைது

Published On 2019-04-02 11:36 GMT   |   Update On 2019-04-02 11:36 GMT
புதுவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் புதுசாரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள மதுக்கடை அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த வண்டு மணி (30) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது.

மேலும் இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். வண்டுமணி கோவிந்தசாலையை சேர்ந்த வனராஜ் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வண்டு மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் ரொக்க பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாகி விட்ட வனராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News