செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

Published On 2019-02-19 11:39 GMT   |   Update On 2019-02-19 11:39 GMT
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
சென்னை:

வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 



இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் பாஜக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance  
Tags:    

Similar News