செய்திகள்

கஜா புயல் பாதித்த பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள்

Published On 2019-02-14 15:52 GMT   |   Update On 2019-02-14 15:52 GMT
ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4,200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் வழங்கினர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு- 4200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் நேற்று வழங்கினர்.

இந்திய அரசின் தேசிய கடல் வனத்துறை தொழில் நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினர்.

குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் வெங்கடேசன் தலைமையில், அருள்  முத்தையா, வெங்கடேசன், திருமுருகன், சுந்தர வடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆலங்குடி, நெடுவாசல், சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை    தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4,200 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினர்.

முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் ராமசாமி, நூலகர் வெங்கட் ரமணி, ஓய்வு ஆசிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். #tamilnews
Tags:    

Similar News