செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தன

Published On 2019-02-01 09:02 GMT   |   Update On 2019-02-01 09:02 GMT
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டன. #FuelPrice
சென்னை:

பெட்ரோல்- டீசல் விலைகள் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறுவதும்- இறங்குவதுமாக உள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் மிக அதிக விலை உச்சத்தை பெட்ரோல்-டீசல்கள் தொட்டன. பிறகு டிசம்பர் மாதம் கணிசமான அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறத் தொடங்கின. ஒரு வாரத்துக்குள் அதிகளவு விலை ஏற்றத்தை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.

ஆனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. இன்றும் பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டன. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.64 காசுகளுக்கு விற்கப்பட்டது.

டீசல் விலையில் லிட்ட ருக்கு 11 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.69.41 காசுகளாக இருந்தது. #FuelPrice
Tags:    

Similar News