செய்திகள்

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 87 போலீசார் நியமனம்

Published On 2019-01-30 17:34 GMT   |   Update On 2019-01-30 17:34 GMT
ஐகோர்ட்டு உத்தரவின் எதிரொலியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 87 போலீசாரை நியமனம் செய்து டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். #PonManickavel
சென்னை:

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது தலைமையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தனது விசாரணைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவர் கேட்கும் உதவிகளை செய்து தரவேண்டும் என ஐகோர்ட் காவல் துறைக்கு உத்தரவிட்டது.



இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 87 போலீசார் நியமனம் செய்து டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள செய்தியில், சிலை கடத்தல் பிரிவுக்கு 11 டி.எஸ்.பிக்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 87 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 87 போலீசாரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையின் கீழ் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #PonManickavel
Tags:    

Similar News