செய்திகள்

தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு - வெங்கையா நாயுடு புகழாரம்

Published On 2019-01-24 12:07 GMT   |   Update On 2019-01-24 12:07 GMT
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என புகழாரம் சூட்டியுள்ளார். #GIM2019 #VenkaiahNaidu
சென்னை:

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும். தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி.

தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.



தமிழகம் வாகனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது. மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும். 

தமிழகத்தில் திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் தத்துவம் ஆகும்.

மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன என கூறினார். #GIM2019 #VenkaiahNaidu
Tags:    

Similar News