செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

Published On 2019-01-13 11:13 GMT   |   Update On 2019-01-13 11:13 GMT
புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #Puducherrygovernment #Puducherrygovernmentban #plasticusageban
புதுச்சேரி:

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட 14 வகையான எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை.



தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக புதுச்சேரி மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி இன்று அறிவித்துள்ளார். #Puducherrygovernment #Puducherrygovernmentban #plasticusageban 
Tags:    

Similar News