செய்திகள்

சீர்காழி பகுதி விவசாயிகள் 15-ந்தேதி வரை உளுந்து- கடலைக்கு பயிர் காப்பீடு செய்யலாம் - அதிகாரி தகவல்

Published On 2019-01-11 09:36 GMT   |   Update On 2019-01-11 09:36 GMT
சீர்காழி பகுதி விவசாயிகள் 15-ந்தேதி வரை உளுந்து- கடலைக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று அதிகாரி தகவல் கூறியுள்ளார்.

சீர்காழி:

சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் பொ.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும்,பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறு, எள்,நிலக்கடலை,கோடை நெல்,தரிசுபருத்தி பயிரை காப்பீடு செய்ய ஒவ்வொரு பயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டு அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.கடன்பெறா விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள்,வங்கிகள்,மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு பிரிமியம் பயிர் தொகையாக உளுந்துபயிருக்கு ரு.214.50,பாசிப்பயிருக்கு ரூ.214.50,நிலக்கடலைக்கு ரூ.357.00,எள் பயிருக்கு ரூ.180.00 இவற்றிக்கு பிரிமியம் தொகை செலுத்த ஜனவரி 15ம் தேதி கடைசி நாளாகும்.

கோடை நெல் சாகுபடிக்கு ரூ.442.50.கடைசி தேதி பிப்ரவரி 15 மற்றும் பருத்திக்கு ரு.354 கடைசிதேதி மார்ச் 15-ந்தேதி ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம்,கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது உதவி வேளாண்மை அலுவலரால் வழங்கப்படும் சாகுபடி சான்று, வங்கி கணக்குப்புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பயிர் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News