செய்திகள்
நிர்மலாதேவி

உறவினர்கள் யாரும் சந்திக்க வராதது வருத்தம் அளிக்கிறது - நிர்மலாதேவி

Published On 2019-01-11 04:07 GMT   |   Update On 2019-01-11 04:07 GMT
சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரை பாலியல் பேரத்திற்கு அழைத்து அவர்களை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதைதொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். முடிவில் இந்த வழக்கை நீதிபதி லியாத் அலி, வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவியிடம் “ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராக வந்தபோது, உறவினர்களை சந்திக்க விரும்புவதாக கூறினீர்கள். யாராவது உங்களை சிறையில் வந்து சந்தித்தார்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நிர்மலாதேவி கூறும்போது, “சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது” என கூறினார். பின்னர் நிர்மலாதேவி உள்பட 3 பேரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். #NirmalaDevi

Tags:    

Similar News