செய்திகள்

ரே‌சன் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு- போலீஸ் கமி‌ஷனர் நேரில் ஆய்வு

Published On 2019-01-10 11:13 GMT   |   Update On 2019-01-10 11:13 GMT
சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் வடசென்னை பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரச்சனை வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். #PongalGift
சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் கடந்த 7-ந்தேதி முதல் 1000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதில் நேற்று மதியம் வரை எந்த பிரச்சனையும் இன்றி வினியோகம் நடந்தது.

வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க சென்னை ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தை தொடர்ந்து ரே‌சன் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விட்டது.

பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் நேற்று மாலையில் ஏராளமான பேர் ரேசன் கடைக்கு சென்றனர். இன்றும் காலையிலேயே கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது.

சென்னையில் 1278 ரே‌சன் கடைகளிலும் அதிக அளவு கூட்டம் திரண்டதால் ஒவ்வொரு ரே‌சன் கடைக்கும் 4 போலீசார் வீதம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் கண்காணிப்பில் தற்போது தகுதி உள்ள நபர்களுக்கு மட்டும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் வடசென்னை பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரச்சனை வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். #PongalGift
Tags:    

Similar News