செய்திகள்

கஜா புயல் நிவாரணம் குறித்து 2 வாரத்தில் முடிவு - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Published On 2018-12-18 03:12 GMT   |   Update On 2018-12-18 03:12 GMT
கஜா புயல் நிவாரணம் குறித்து 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #GajaCyclone
மதுரை:

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பியது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘தமிழக அரசு கூடுதல் விவரங்கள் அளித்ததும் மத்திய குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின்னர் 2 வாரத்தில் கஜா புயல் நிவாரணம் பற்றி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பு வக்கீல், மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். உடனே நீதிபதிகள், தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பற்றி 19-ந் தேதி (நாளை) பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #GajaCyclone

Tags:    

Similar News