செய்திகள்

கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு

Published On 2018-12-16 14:37 GMT   |   Update On 2018-12-16 14:37 GMT
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் வாழ்க்கைக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #soniagandhi #karunanidhistatue #dmk
சென்னை: 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேசியதாவது:-

60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலிலும், சுமார் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையிலும் இணைந்து இருந்தவர் கருணாநிதி. இந்த தமிழ்நாட்டின் வரலாறையும் எதிர்காலத்தையும் அவர் ஒருசேர வடிவமைத்தார்.

15 முறை சட்டசபை உறுப்பினராகவும் 5 முறை  முதல் அமைச்சராகவும் சுமார் 20 ஆண்டு காலம் இந்த மாநிலத்தை வழி நடத்தியவர் அவர். இந்த சாதனையை இதுவரை யாரும் செய்தவில்லை. எதிர்காலத்தில் செய்யவும்  யாருமில்லை. மிகச்சிறந்த பேச்சாளரான அவர் தனது அரசியல் பணிகளுக்கிடையயே தமிழ் இலக்கியத்துக்காகவும் நேரம் ஒதிக்கி இருந்தார். 

அவரது பேனாவுக்னென்று தனிசக்தி இருந்தது. தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த அளவு கடந்த பற்றினால் நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நாடகங்களும் எண்ணற்ற கவிதைகளையும் தொண்டர்களுக்கு சுமார் 7 ஆயிரம் கடிதங்களையும் எழுதியிருந்தார். 

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தனது உயிர் மூச்சான தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்று தந்தார். 

தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் வழிவந்த கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சமத்துவ திட்டங்களையும் நிறைவேற்றினார். திருமண சட்ட சீர்திருத்தம், பெண்களுக்கு சொத்துரிமை, அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஓதுக்கீடு என பல சட்டங்களை இயற்றினார். 

அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் அவரது ஆட்சியால்தான் இயற்றப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். சிறுபான்மையின மக்களுக்காக நன்மை தரக்கூடிய பல சமூக நலத்திட்டங்களை அவர் நிறைவேற்றினார். 

வங்கிகள் தேசிய மயம் மற்றும் மன்னர் மானிய ஒழிப்பு ஆகிய முக்கிய சட்டங்களை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இவற்றை எல்லாம் முழுமையாக ஆதரித்தவர்.

மேலும், கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்தியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கருணாநிதியும் தி.மு.க.வும் அளித்த ஆதரவை நாங்கள் எந்த நாளிலும் மறக்க மாட்டோம்.

அந்த கூட்டணி ஆட்சியில் சில மனவேறுபாடுகள் ஏற்பட்ட போது அவற்றுக்கு தீர்வு காண அவர்வழி காட்டியாகாவும் இருந்தார். 

அப்பபடிட்ட தலைவராக வாழ்ந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நாம் எல்லாம் இன்று மீண்டும் தோளோடு தோளாக இந்த மேடையில் நிற்கின்றோம். தற்போதைய அரசியல் போராட்டத்தில் காங்கிரஸ் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். 

ஜனநாகயகத்தை பாதுகாக்கவும், புதிய இந்தியாவை உருவாக்கவும் நாம் இணைந்துள்ளோம் என்பது இந்த நாட்டுக்கு நாம் தெரிவிக்கும் செய்தியாக அமைய வேண்டும்.

கருணாநிதியின் நினைவுகள் என்றென்றும் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #soniagandhi #karunanidhistatue #dmk
Tags:    

Similar News