செய்திகள்

தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார் - ராகுல் காந்தி புகழாரம்

Published On 2018-12-16 13:39 GMT   |   Update On 2018-12-16 13:39 GMT
சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார் என புகழாரம் சூட்டினார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
சென்னை:

சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல. தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார்.

தனது வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி எளிமையையும், அகங்காரம் இல்லாத குணத்தையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது சந்திப்பு எனக்கு உந்துதலாக இருந்தது.



கோடானு கோடி மக்களின் குரலை கேட்காத அரசாங்கமாக தற்போதைய பாஜக அரசு உள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசை விடக்கூடாது. நாம் ஒன்றுபட்டு நிற்போம்.

நான் இந்த விழாவில் பேசியதை கவுரமாக கருதுகிறேன். நான் கருணாநிதியை பற்றி பேசும்போது தமிழகத்தின் பெருமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பேசுவதாக நினைக்கிறேன். நாட்டு ஒற்றுமையை பலப்படுத்துவேன், நன்றி என தெரிவித்தார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
Tags:    

Similar News