செய்திகள்

நாமக்கல்லில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2018-12-14 17:31 GMT   |   Update On 2018-12-14 17:31 GMT
நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் சுமார் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது.
நாமக்கல்: 

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 3,300 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகள் சுமார் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச்.ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 250 முதல் ரூ.6 ஆயிரத்து 140 வரையிலும், டி.சி.எச்.ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 210 முதல் ரூ.6 ஆயிரத்து 863 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News