ஆவடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Denguefever
ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டம். .
இவரது மகன் ஆகாஷ் (வயது 8) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29-ந் தேதி ஆகாசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனை சென்னை, ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்தபோது ஆகாசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவனை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக இறந்தான். #DenguFever