செய்திகள்
பலியான ராஜேஸ்வரி

எண்ணூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-12-03 09:53 GMT   |   Update On 2018-12-03 09:53 GMT
ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த எண்ணூரை சேர்ந்த பெண் பலியானார். #DengueFever
திருவொற்றியூர்:

எண்ணூர், நேரு நகர், மனமகிழ் மன்றம் தெருவைச் சேர்ந்தவர் மாலி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28).

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதன் பின்னர் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 29-ந்தேதி ராஜேஸ்வரியை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான ராஜேஸ்வரி வசித்து வந்த குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் மழை நீரும், கழிவு நீரும் அகற்றப்படாமல் தேங்கி இருப்பதால் தொற்று நோய் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். #DengueFever



Tags:    

Similar News