செய்திகள்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

Published On 2018-11-21 10:17 GMT   |   Update On 2018-11-21 10:17 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. #Vaigaidam
கூடலூர்:

நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக குறையத் தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 63.58 அடியாக உள்ளது.

நேற்று நீர் திறப்பு 2,170 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 1,560 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 913 கன அடி நீர் வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 129.60 அடியாக உள்ளது. 1,217 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 450 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் சுருளி ஆறு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.50 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழை எங்கும் இல்லை. #Vaigaidam

Tags:    

Similar News