செய்திகள்

தெலுங்குபாளையத்தில் 830 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2018-11-20 18:01 GMT   |   Update On 2018-11-20 18:01 GMT
தெலுங்குபாளையத்தில் உள்ள குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 830 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை:

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து கோவையில் குடோன்களில் பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து குடோன்களில் சோதனை நடத்தி புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை மேற்பார்வையில், தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் உள்ள கோவிந்தசிங் என்பவரது குடோனில் நேற்று சோதனை நடைபெற்றது.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 830 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கோவிந்தசிங் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை பொன்னையராஜபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தி 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News