செய்திகள்

கஜா புயல்: முதலமைச்சர் நாளை ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை- பன்னீர்செல்வம்

Published On 2018-11-17 16:18 GMT   |   Update On 2018-11-17 16:18 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதல் அமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy #OPanneerSelvam
சென்னை:

கஜா புயல் பாதிப்பு குறித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, உதயகுமார், வேலுமணி, காமராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பின் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதல்வர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை. 6 மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிப்பது பற்றி நவ.19ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படும்.

திங்கட்கிழமை முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.



இவ்வாறு அவர் கூறினார்.

கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #EdappadiPalanisamy #OPanneerSelvam
Tags:    

Similar News