செய்திகள்

டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு

Published On 2018-11-11 17:54 GMT   |   Update On 2018-11-11 17:54 GMT
சர்க்கரை ஆலை மற்றும் ரஞ்சன்குடிகோட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சாந்தா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி எறையூர் சர்க்கரை ஆலை மற்றும் ரஞ்சன்குடிகோட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சாந்தா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் சர்க்கரை ஆலை பகுதிகள், ரஞ்சன்குடி கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தண்ணீர் பிடிக்கும் இடங்கள், கோட்டையில் உள்ள சிறு குளம் உள்ளிட்டவைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா?, மேலும் மழைக்காலங்களில் இப்பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் ஸ்ரீதர், துணை இயக்குனர் டாக்டர் சம்பத், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், மணிவாசகம், தாசில்தார் பொன்னுதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News