செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 7000 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2018-11-03 05:47 GMT   |   Update On 2018-11-03 05:47 GMT
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. #Hogenakkal
ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6100 கனஅடியாக வந்தது. நேற்று நீர்வரத்து சற்று சரிந்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்த நிலையில் அஞ்செட்டி, நாட்டறாம்பாளையம் மற்றும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

தீபாவளி பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழையின் காரணமாக இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

இதனால் மீன் விற்பனை, உணவகங்கள் போன்ற கடைகளில் சுற்றுலா பயணிகளின் வெறிச்சோடி காணப்பட்டன. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர். #Hogenakkal

Tags:    

Similar News