செய்திகள்

மானாமதுரை வழியாக பண்டிகை கால எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும்- பயணிகள் வலியுறுத்தல்

Published On 2018-10-12 12:29 GMT   |   Update On 2018-10-12 12:29 GMT
மானாமதுரை வழியாக பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணியஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்கு மானாமதுரையில் இருந்து தான் பிரிந்து செல்ல வேண்டும்.

மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது மானாமதுரையில் இருந்தும், மானாமதுரை வழியாக இந்தியா முழுவதும் ஏராளமான ரெயில்கள் ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டன.

அகல ரெயில்பாதை வசதி வந்தவுடன் பல ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. ராமேசுவரம் -பாலக்காடு மற்றும் கோவைக்கு பழனி, பொள்ளாச்சி வழியாக ரெயில் இயக்கப்பட்டது. இப்போது இல்லை.

ராமேசுவரம்-கோவை இடையே திருச்சி, கரூர், ஈரோடு வழியாக வாரம் ஒரு ரெயில் மட்டுமே வெகுதூரம் சுற்றிச் செல்லும் நிலையில் விடப்பட்டு உள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு புதிதாக விடப்பட்ட 3 ரெயில்களும் ராமேசுவரம், மானாமதுரை, திருச்சி, கும்பகோணம், விழுப்புரம் ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது.

தற்போது பண்டிகை கால சிறப்பு ரெயில்களில் சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் உள்ள புதுக்கோட்டை, காரைக்குடி, சிவங்கங்கை மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக எந்தவித சிறப்பு ரெயிலும் இயக்கப்படாததால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமேசுவரம்-சென்னை இடையே முன்பதிவு இல்லாத அந்தியோதயா சிறப்பு ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை-பழனி வழியாக கோவை, பாலக்காடு வரை புதிய ரெயில்கள் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News