செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராக வந்த காட்சி.

ஆணையத்தில் 15 பேர் ஆஜர்- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளிடம் குறுக்கு விசாரணை

Published On 2018-09-27 08:37 GMT   |   Update On 2018-09-27 08:37 GMT
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.#JayadeathProbe #ApolloHospital
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.

டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. #JayadeathProbe #ApolloHospital

Tags:    

Similar News