செய்திகள்

ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2018-09-18 08:33 GMT   |   Update On 2018-09-18 08:33 GMT
பாரதிய ஜனதாவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று விசாரித்தார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
சென்னை:

சமீபத்தில் ஜாபர்கான்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் பெட்ரோல் விலை உயர்வது குறித்து குரல் எழுப்பினார்.

வேகமாக மேடைக்கு சென்ற அவர், தமிழிசை சவுந்தரராஜன் அருகில் நெருங்க முயன்றார். அவரை பா.ஜனதா தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து ஆட்டோ டிரைவரை பா.ஜனதாவினர் தாக்கியதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், தமிழசை சவுந்தரராஜன் ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஆறுமுகம் தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் கதிர்வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்றார். தொண்டர்கள் யாரும் தாக்கினார்களா? என்பதை கேட்டு அறிந்தார்.


கதிரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழிசை கூறியதாவது:-

மேடையில் தாக்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டதால் நேரில் வந்து கேட்டேன். தான் ஒரு ஆட்டோ டிரைவராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேட்டதாகவும், மது குடித்து இருந்ததால் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். யாரும் அடிக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை என்றார்.

சில கட்சியினர் அவரை அணுகி தாக்கப்பட்டதாக கண்டன சுவரொட்டிகள் அச்சிடவும் கேட்டார்களாம். ஆனால் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
Tags:    

Similar News