லைஃப்ஸ்டைல்

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய குளுமை தரும் ஏசியின் பராமரிப்புக் குறிப்புகள்

Published On 2019-05-04 02:59 GMT   |   Update On 2019-05-04 02:59 GMT
ஏசி போன்ற விலை உயர்ந்த பொருட்களைச் சரியாகப் பராமரித்து வந்தாலே ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏசியை எவ்வாறு பராமரிக்கலாம் என்ற குறிப்புகலை இனி பார்ப்போம்.
சில பொருட்களை திரும்பத் திரும்ப புதிதாக வாங்க முடியாது. அதுவும் ஏசி போன்ற விலை உயர்ந்த பொருட்களைச் சரியாகப் பராமரித்து வந்தாலே ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் சரிவரப் பராமரிப்பதனால் மின்சாரச் செலவையும் குறைக்க முடியும். ஏசியை எவ்வாறு பராமரிக்கலாம் என்ற குறிப்புகலை இனி பார்ப்போம்.

* கோடைக்காலம் துவங்கிய பிறகு இப்பொழுதுதான் ஏசி பெட்டியை பயன்படுத்தத் துவங்குவோம்! பல மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் ஏசியின் உள்ளே தூசி மற்றும் ஒட்டடைகள் அடைந்து சேகரமாயிருக்கும். எனவே, முதலில் ஏசியை சரிவீஸ் செய்த பிறகே பயன்படுத்த துவங்க வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் பல நேரங்களில் ஏசி பெட்டி சூடேறி தீப்பற்றும் அபாயம் உள்ளது.

* நாள்தோறும் பயன்படுத்தும் ஏசிக்கு முறையான ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற நிலையாக்கி (ஸ்டெபிளைசர்களை) உபயோகிக்க வேண்டும்

* ஏசியை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

* விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி கணினி மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்சாதப் பொருட்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றின் மின் இணைப்பை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் அவை ஏசியின் மின் ஏற்றத்தை அதிகரிக்கலாம்.

* ஏசியின் வெப்பநிலை அளவு 24-25 டிகிரி செல்சியஸ் இருப்பதுபோல் பார்ததுக் கொள்ள வேண்டும். இதனால் மின்சார சேமிப்பு நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை.

* கணினி, மடிக்கணினி விளக்குகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவற்றை ஏசியின் அருகில் வைத்தால் அவை ஏசியின் மின்தேக்கியை நீண்ட நேரம் வேலை செய்ய வைத்து மின்சாரச் செலவை அதிகமாக்கும்.

* ஏசியை பயன்படுத்தும் பொழுது அத்துடன் கூரை விசிறியையும் (சீலிங்ஃபேன்) பயன்படுத்தினால் அது ஏசியின் வேலைச் சுமயை குறைப்பதில் உதவி செய்கிறது.

* குளிர் காலத்தில் பெரும்பாலும் ஏசியை உபயோகப்படுத்த மாட்டோம். அந்தச் சமயத்தில் ஏசியின் கம்ப்ரசரை தூசி சேராமல் ஒரு துணியைக் கொண்டு மூடி வைக்கலாம்.

* ஏசி சேவை நிபுணரை அழைத்து ஏசியை சர்வீஸ் செய்கிறோம் என்றால் அவர் ஏசியின் சுருள்கள் (காயில்ஸ்), அமுக்கி (கம்ப்ரஸ்), ஹெக்கைகள் (பின்ஸ்), வடிகட்டிகள் (ஃபில்டர்ஸ்), வடிகால்கள் (டிரையின்ஸ்) போன்ற அனைத்து பாகங்களையும் சரிபார்த்து தேவையான சேவையை சரிவரச் செய்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* நம்முடைய ஏசியானது அதிகமான பராமரிப்புச் செலவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் புதிய ஏசியை வாங்கி விடுவதே மிகச்சிறந்தது. இல்லையென்றால், அது மின்சாரச் செலவை மிகவும் அதிகமாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

* ஏசி உபயோகிக்கும் அறையை பகல் நேரங்கலில் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் அந்த அறையின் அலமாரிகள், பரன்கள் போன்றவற்றை கதவுகளைக் கொண்டு மூடி வைத்திருப்பது ஏசி அதிக நேரம் வேலை செய்வதைத் தடுப்பதுடன் அறையின் குளிர்நிலையும் அதிக நேரம் நீடித்திருக்க உதவுகின்றது.

* என்னதான் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தாலும் ஏசியை முறையாக பராமரிப்புடுன் பயன்படுத்த வேண்டும். அதுவே வீட்டிற்கும், நாட்டிற்கும் நலம் பயக்கும்.
Tags:    

Similar News