லைஃப்ஸ்டைல்

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

Published On 2019-03-21 04:32 GMT   |   Update On 2019-03-21 04:32 GMT
சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள். அத்தகைய பெரும்பேறு பெற்றது தாய்மை. தாய்மார்களுக்கு குழந்தையின் வருகை ஒரு அற்புதமான நிகழ்வாகும். அதே சமயம் கடினமானதாகவும் மற்றும் நிறைய பொறுப்புகளும் இருக்கும். தூக்கத்திக்கு நேரம் இருக்காது, உணர்ச்சிகளின் ஏற்ற தாழ்வு அதிகமாக இருக்கும். நீங்கள் அனுபவிப்பது சாதாரணமாக எல்ல தாய்மார்களுக்கும் ஏற்படுவதாகும்.

ஆனால் சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். தாய்மார்களுக்கு பொதுவாகவே பேபி ப்ளூஸ் அனுபவம் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வினால் மனநிலை அலைபாயும். குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் மனநிலையில் சமநிலை இல்லை என்றால் அவர்கள் பிரசவத்துக்குப்பின் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கண்ணை பார்த்து பேச மாட்டார்கள். மற்றும் குறைவாகவே புன்னகைப்பார்கள். இந்த கோளாறு மிகவும் குறைவான அளவிலேயே கண்டறியப்படுகிறது. இதற்கான போதுமான விழிப்புணர்ச்சி நம்மிடையே இல்லை. பிரசவத்தின் பொழுது ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வு நிலை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சம நிலைக்கு வந்துவிடும். இதற்கான அறிகுறிகள் பிரசவ நேரத்தில் மற்றும் குழந்தை பிறந்த முதல் 12 மாதங்களில் தோன்றும்.

காரணங்கள் :

முந்தய பிரசவத்தின் பொழுது மன அழுத்தம்
குடும்ப பாரம்பரிய மன அழுத்தம்
கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிர்ச்சியான சம்பவம்
பிரசவத்தின் பொழுது சிக்கல் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சினை
பிரசவத்தை நினைத்து கலக்கம்
வலுவான ஆதரவு இன்மை

அறிகுறிகள் :

குடும்பத்தாரையும் நண்பர்களையும் முற்றிலும் தவிர்த்தல். உங்களையும் குழந்தையையும் பாதுகாக்க முடியாமல் போகுதல், குழந்தையுடன் நெருக்கமாக உணராமல் இருப்பது மற்றும் பிணைப்பு இல்லாமல் இருப்பது, தீவிரமாக மனம் அலை பாய்வது, பதற்றம் மற்றும் பீதி அடைதல்.

மிக குறைவாக அல்லது அதிகமாக தூங்குவது தினசரி செய்யும் வேலை களில் நாட்டம் இல்லாமல் இருத்தல், குழந்தையை காயப்படுத்துவது போன்ற எண்ணங்கள்.

தற்கொலையை தூண்டி விடும் எண்ணங்கள், மிக அதிக கோபம் மற்றும் எரிச்சல், குற்ற உணர்வு மற்றும் அவமானம் காரணமே இல்லாமல் அடிக்கடி அழுவது, தன்னை தானே தனிமை படுத்திக்கொள்வது

புள்ளிவிபரம் :


குழந்தையை பராமரிக்காமல் இருப்பது, உதாரணமாக பால் புகட்டுவது, டயபர் மாற்றாமல் இருப்பது, உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுக்காமல் இருத்தல், இந்த குழந்தை என்னுடையது இல்லை, போன்ற எண்ணங்கள்.

7 தாய்மார்களில் ஒருவருக்கு பிரசவத்துக்கு பின் மன அழுத்தம் உள்ளது.

50 சதவீதம் தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருக்கிறது என்று தெரியாது.

20 சதவீதம் தாய்மார்களின் தற்கொலைகள் (இந்த கோளாறினால் பாதிக்கபட்டவர்கள்), தாய்மார்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
10 சதவீதம் தந்தைகள் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

முதல் பிரசவத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் இரண்டாம் பிரசவத்தின் பொழுது 50 சதவீதம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 49 சதவீதம் தாய்மார்கள் தங்கள் மனஅழுத்தத்துக்கான சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

மகப்பேற்று சுகாதார நிலையை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள் :

ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் , போதுமான தண்ணீர் பருகவும்.

குழந்தை தூங்கும் பொழுது தூங்குதல், மிதமான நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி, உங்கள் கணவருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,
தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்ளாமல் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருங்கள்.

உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மன அழுத்தத்தை பற்றி மனம் விட்டு பேசுங்கள். வெளியே இயற்கை சூழலில் சிறிது நேரத்தை செலவிடுங்கள் உங்களை நீங்கள் முதலில் பராமரித்து கொள்வது அவசியம்

சிகிச்சை

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் மூன்று மாதத்திற்குள் சரி ஆகிவிடும், ஆனால் அன்றாட வாழ்க்கையில் சாதாரண செயல்பாடுகளில் இந்த பிரச்சினை தலையிடும் பொழுது, உடனே மன நல மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. கவுன்சிலிங் மற்றும் சைகோதெரபி மூலமாக குணப்படுத்த முடியும். மன அழுத்தம் தீவிரமாக இருந்தால் உங்கள் மன நல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் பரிந்துரைப்பார். பிரசவத்திற்கு பின் மன அழுத்தத்துக்கு ஆளான 90 சதவீதம் பேர் மருந்துகள் மூலமாக குணம் அடைந்து இருக்கிறார்கள்.

பிரசவத்துக்கு பின் ஏற்படும் கோளாறு தாய்மார்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, சில தந்தைமார்களுக்கும் ஏற்படும்.

1-ல் 20 தந்தைமார்கள் மற்றும் 1-ல் 7 தாய்மார்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த அடுத்த நொடி ஒரு தாயும் பிறக்கிறாள், தாய்மையை போற்றுங் கள், குழந்தையை பெற்ற அனைத்து தாய்மார்களும் ஒரு உயிரை இந்த மண்ணில் அறிமுக படுத்தும் அதிசய பிறவி!!

vcopevandhana@gmail.com
Tags:    

Similar News