லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீரழிவு நோய்

Published On 2019-03-11 03:45 GMT   |   Update On 2019-03-11 03:45 GMT
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும்.
நீரழிவு நோய் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. ஏனென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதினர்களுக்கு கூட நீரழிவு என்ற சர்க்கரை வியாதி வந்து விடுகிறது. மருத்துவர்களும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சர்க்கரை வியாதியை பற்றி விழிப்புணர்வையும் வருமுன் தவிர்க்க தேவையான வழி முறைகளையும் அறிவுறுத்துகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.

அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.

உதாரணமாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவையாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தையினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.

உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக்கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News