லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Published On 2019-02-22 06:41 GMT   |   Update On 2019-02-22 06:41 GMT
கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.

முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும்.

இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.

இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.

எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.

இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
Tags:    

Similar News