லைஃப்ஸ்டைல்

தேவையற்ற முடியை நீக்கும் குளியல் பொடி

Published On 2019-05-18 06:46 GMT   |   Update On 2019-05-18 06:46 GMT
இயற்கை முறையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது. இந்த குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையற்ற முடியை நீக்க பெண்கள் சிரமப்படுகின்றனர். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது. இதனால் வாக்சிங் செய்ய அவசியம் இல்லை. ஆனால், வாக்சிங் செய்ய வேண்டிய அவசியத்துக்கு தற்போது அதிகம் தள்ளப்படுகின்றனர்.

இயற்கை சிகிச்சையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது. இதெல்லாம் ப்ளஸ். மைனஸ் என்னவென்றால் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குறைந்தது 6 மாதம் - 1 வருடம் ஆகலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கால கட்டம் எடுக்கும். சிலருக்கு 3 மாதத்தில் ரிசல்ட் தெரியலாம். சிலருக்கு 6 மாதம் ஆகலாம். சிலருக்கு ஒரு வருடமும் ஆகலாம். ஆனால், நிச்சயம் தீர்வு கிடைக்கும். அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து தாமதம் ஆகும். ஆனால், தீர்வு நிச்சயம் உண்டு.

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
வெட்டி வேர் - 100 கிராம்
விலாமிச்சை வேர் - 100 கிராம்
சீமை கிச்சலி கிழங்கு - 100 கிராம்
கோரை கிழங்கு - 100 கிராம்

இவற்றை பொடித்து வைத்து குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். அல்லது தேவையான இடங்களில் பேக் போல போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதைத் தினமும் செய்யலாம்.

6 மாதத்தில் ரிசல்ட் தெரிய தொடங்கும். முடியின் வளர்ச்சி குறைந்திருக்கும். சில முடிகளும் உதிரும். ரெடிமேடாக கடையில் பவுடராக விற்பதை வாங்க வேண்டாம். தரமாக இல்லையெனில் பலன் அளிக்காது. நீங்கள் பொருட்களை வாங்கி அரைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

தேவையற்ற முடியை நீக்கும் பொடி

கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் - ஒரு பங்கு
அம்மான் பச்சரிசி - பாதி பங்கு

இவற்றை நன்கு அரைத்துப் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரில் குழைத்துத் தேவையான இடங்களில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவவும். தினமும் செய்யலாம். அம்மான் பச்சரிசி சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் ஒருமுறை செக் செய்துவிட்டு பயன்படுத்தவும்.
Tags:    

Similar News