லைஃப்ஸ்டைல்

ஹேர் கலரை நீக்க இதை செய்யுங்க

Published On 2019-05-16 06:44 GMT   |   Update On 2019-05-16 06:44 GMT
பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.
தலைமுடியை நாம் இஷ்டப்பட்டதை போல் எப்படி எப்படியோ அலங்கரித்து கொள்கிறோம். நமக்கு பிடித்தவாறு முடி வெட்டி கொள்கிறோம். பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். பல ஷேட்களில் இருக்கும் நிறங்களை தலைமுடியில் ஏற்றும்போது கூந்தல் வலுவிழந்து போகும். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.

* ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கலக்கவும். இதனை தலைமுடிக்கு தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை அலசி விடவும். எலுமிச்சை தலைமுடியில் உள்ள செயற்கை நிறத்தை அகற்றி கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பேக்கிங் சோடா கூந்தலை வலுவலுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். இந்த கலவையை தலைமுடியில் தடவி அலசியது, மீண்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை பராமரிக்கவும்.

* எப்சம் சால்ட் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவினால், செயற்கை நிறம் நீங்கிவிடும். இந்த கலவையை 20 நிமிடங்கள் வைத்திருந்து தலைமுடியை அலசவும். பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.

* நீங்கள் ஹேர் கலர் செய்ததும் ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், 24 மணிநேரத்திற்குள் வினிகரை பயன்படுத்தி அந்த செயற்கை நிறத்தை நீக்கிவிட முடியும். தலைமுடியில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசிவிடவும். இதுபோன்று தொடர்ச்சியாக செய்து வருவதனால் அந்த நிறத்தின் அடர்த்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.

Tags:    

Similar News