லைஃப்ஸ்டைல்

பொடுகு ஏன் வருகிறது? வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

Published On 2019-05-13 08:09 GMT   |   Update On 2019-05-13 08:09 GMT
பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகு ஏன் வருகிறது. பொடுகு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வறட்சியான சருமத்தினால் வரும்.

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது.

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு பிரச்சனை வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.

7. அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்.

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

* சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிஷம் கழித்து குளிக்கனும்.

* பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

* வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

* பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.

* வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

* வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

Tags:    

Similar News