லைஃப்ஸ்டைல்

கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

Published On 2019-05-01 04:23 GMT   |   Update On 2019-05-01 04:23 GMT
கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு - 100 கிராம்
எலுமிச்சை தோல் காய வைத்தது - 25
பாசிப்பருப்பு - கால் கிலோ
மரிக்கொழுந்து - 20 குச்சிகள்
மல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்
கரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு.

செய்முறை

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.
Tags:    

Similar News