லைஃப்ஸ்டைல்

இளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்

Published On 2019-03-18 05:04 GMT   |   Update On 2019-03-18 05:04 GMT
முதுமை தோற்றத்தை தடுக்க ஆயில் மசாஜ் மிகவும் அவசியம். ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம்.

திராட்சை எண்ணெய்:

இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.

நல்லெண்ணெய்:

உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
Tags:    

Similar News