லைஃப்ஸ்டைல்

வெயில் காலத்துக்கு உகந்த பருத்தி ஆடைகள்

Published On 2019-03-08 06:08 GMT   |   Update On 2019-03-08 06:08 GMT
பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான்.  கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

அதாவது பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது. கோடையினால் நம் உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். கிட்டத்தட்ட ஆட்டோமேட்டிக் டவலைப் போல் செயல்படுகிறது. இதனால் உடலின் களைப்பும் தெரிவதில்லை.

அடுத்ததாக சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்றும் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமலும் செய்கிறது. இதனால் வெப்பத்தை வெளியேற்ற காற்றை உள்ளே இழுக்கச் செய்கிறது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் குறைகிறது.



இது இலகுவான தன்மையைப் பெற்றதால் அனைத்து விதமான உடல் அமைப்பு பெற்றவற்களுக்கும் இவ்வாடைகள் பொருந்தி விடுகின்றன.

சிந்தடிக், பாலிஸ்டோர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்துவிதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.

மேலும் உடலில் காயம் பட்டால் பயன்படுத்தப்படும் பஞ்சு, பேண்டேஜ் எல்லாமே பருத்தியால் செய்யப்படுகிறது. எடைக் குறைவான இந்த பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது.

காட்டன் புடவைகளை நாம் பராமரிக்கும் விதத்தைப் பொருத்து அதன் ஆயுட்காலமும் அதிகரிக்கும். பருத்திப் புடவைகளை நாம் சுடுநீரில் மட்டுமே அலச வேண்டும்.

இவ்வகை பருத்திப் புடவைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அதிகமாக விரும்பி அணிகின்றனர். இதனால் காட்டன் புடவையிலேயே எபிராய்டரிங், பிரிண்டட் காட்டன், உப்படாஸ், மால்குடி காட்டன், பைத்தானி போன்றவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News