லைஃப்ஸ்டைல்

சருமத்தை பாதுகாக்கும் துளசி

Published On 2019-02-16 05:02 GMT   |   Update On 2019-02-16 05:02 GMT
மருத்துவத்திற்கு பயன்படும் துளசி இலை சரும பராமரிப்பு, பொடுகு பிரச்சனைகள், இளநரையை குணப்படுத்தும். துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கும் உதவுகிறது.

* ஆரஞ்ச் தோல் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, முக பொலிவை தந்து முகப்பருக்களை நீக்கும். மேலும் துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை குறைக்க வல்லது.

* துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள் விரைவில் குணமாகும்.



* 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். அதனுடன் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன் இருக்கும்.

* 15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு, அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் கலந்து தலைக்கு தடவுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு தலையை லேசான சூடான நீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம்.

* 10 துளசி இலையை அரைத்து கொண்டு, அவற்றுடன் முட்டை வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். பிறகு இவை இரண்டையும் நன்றாக அடித்து கொண்டு, முகத்தில் தடவவும். இது முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, பொலிவு பெற செய்யும். மேலும் தோலை இறுக செய்யும்.

* தூசுகள், அழுக்குகள் தலையில் சேர்வதால் அது பொடுகாக மாறி விடுகிறது. இதனை சரி செய்ய துளசி எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொண்டு தலையின் அடி வேரில் தடவி தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சினை குணமாகும்.
Tags:    

Similar News